

தமிழ் ஒரு அழகான இளம் பெண்ணாக பூமியில் தோன்றி, அவர் முன் வரிசையாக தமிழ் கவிஞர்களை எல்லாம் நிறுத்தி, அதில் ஒருவரைத் தனது காதலனாகத் தேர்வு செய்யச் சொன்னால், அவர் நிச்சயம் தாவிச் சென்று கட்டியணைப்பாள் என்றால், அது பாரதிதாசனாகத்தான் இருக்கும்.
வள்ளுவன், கம்பன், இளங்கோ,பாரதி கூட இதில் தோற்றுப்போவார்கள். இவர்களிடம் அறம், பொருள், இன்பம் எல்லாம் இருந்தது. ஆனால் இவர்களைக் காட்டிலும் ஒரு மிளகு கூடுதலாக, அதன் அழகை, தேனூறும் சொற்சுவையை, பிற மொழிக் கலப்பில்லாத அதன் தனித்தன்மையை, தன் பாடல்களில் எளிமையாக பாமரருக்கும் கொண்டு சென்றவர் பாரதிதாசன்.