வலுப்பெறுகின்றனவா உள்ளாட்சிக் கொள்கைகள்?

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தினால்தான் மத்திய நிதி ஆணையத்தின் மூலம் நிதி கிடைக்கும்
வலுப்பெறுகின்றனவா உள்ளாட்சிக் கொள்கைகள்?
Updated on: 
3 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக 2026–2027க்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, ஒவ்வொரு துறை சார்ந்தும் கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்டிருந்த நிலையில், அதைச் சார்ந்த விவாதங்களும் உருவாகியுள்ளன.

அரசமைப்புச் சட்டத்தின்படி நகர்ப்புற உள்ளாட்சிகளும் ஊரக உள்ளாட்சிகளும் மாநில அரசுப் பட்டியலில் வருகின்றன. இதற்கான கொள்கைகளைத் தயாரிக்கும் பொறுப்பு ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றின்கீழ் வருகிறது.

ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை

அனைத்துக் கிராம ஊராட்சிகளுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சி அணுகுமுறையிலிருந்து மாறி, தேவைக்கேற்ப 1,788 கிராம ஊராட்சிகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நகர்ப்புறத்தை ஒட்டிய - பெரிய கிராம ஊராட்சிகள் 1,200; மலைப்பகுதி கிராம ஊராட்சிகள் 277; கடலோரக் கிராம ஊராட்சிகள் 235; சுற்றுலாத்தலம் சார்ந்த கிராம ஊராட்சிகள் 76 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அணுகுமுறை ஒரு நல்ல முன்னெடுப்பாக உள்ளதுடன், வளர்ச்சி இடைவெளியைச் சரிசெய்யவும் நிறைய வாய்ப்பளிக்கிறது. முந்தைய ஆட்சியில் இருந்த ‘நம்ம கிராம சபை’ செயலியில் மக்கள் பங்கேற்பு இல்லாத நிலையை மாற்றி, புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் அரசாணைகள், கிராமசபை அறிவிப்புகள், ஊராட்சித் தீர்மானங்கள், வளர்ச்சித் திட்டங்களை மக்கள் எளிதில் காணலாம். இதில் ஏஐ அடிப்படையிலான பகுப்பாய்வு வசதியும் இணைக்கப்படும். இதன் மூலம் ஊராட்சிகளின் பிரச்சினைகள், தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து உடனுக்குடன் தீர்வு பெற வாய்ப்பு உள்ளது.

கொள்முதல் சீர்திருத்தக் கொள்கை

2024 முதல் நடைமுறையில் இருந்த ஒப்பந்தப் பதிவு முறைக்கு மாற்றாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 2026 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வட்டார அளவிலான பதிவுக்குப் பதிலாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒற்றைப் பதிவு முறை அமல்படுத்தப்படும்.

பட்டியல் சாதியினர் - பழங்குடியினர், தனிநபர் பெண் ஒப்பந்ததாரர்கள் (புதிய சலுகை), மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வேலை இல்லாத கட்டிடப் பொறியியல் பட்டதாரிகள், டிப்ளமா படித்தவர்களுக்குப் பதிவுக்கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in