ஏஐ பிரளயத்தில் இளையோருக்கான கவசங்கள் | செயற்கை நுண்ணறிவு சிறப்புக் கட்டுரை - 3

சமூக அமைப்புகள் தொழில்நுட்பத்தை எதிரியாகப் பார்க்கக் கூடாது
ஏஐ பிரளயத்தில் இளையோருக்கான கவசங்கள் | செயற்கை நுண்ணறிவு சிறப்புக் கட்டுரை - 3
Updated on
3 min read

பதினெட்டு வயதுக்கு உள்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இன்று உலகம் முழுவதும் தீவிரமடைந்துவருகிறது. இணையக் கேலிகள், தவறான தகவல்கள், பாலியல் / வன்முறை உள்ளடக்கங்கள், இணையவழி மோசடிகள் போன்ற ஆபத்துகள் சமூக வலைத்தளங்களில் இருப்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால், அதற்கான தீர்வு சமூக ஊடகங்களைத் தடை செய்வது மட்டும்தானா?

சட்டம் மட்டும் போதாது: மனித வரலாற்றில் ஒவ்வொரு புதிய மாற்றமும் மக்களிடம் அச்சத்தை உருவாக்கியுள்ளது. அச்சு இயந்திரம் வந்தபோது புத்தகங்களும் அச்சு ஊடகமும் ஏராளமான தகவல்களை மக்களிடம் பரப்பிச் சமூகத்தைச் சீரழித்துவிடும் என்கிற அச்சம் இருந்தது. வானொலி, தொலைக்காட்சி, பின்னர் இணையம் வந்தபோதும் இதே கவலை எழுந்தது. ஆனால், எந்த ஒரு தகவல் தொடர்பு தொழில்நுட்பமும் அதனளவில் நல்லதோ கெட்டதோ அல்ல; அதை மனிதர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான், அதன் சமூக விளைவுகளைத் தீர்மானிக்கிறது.

வகுப்பறை, மைதானம், செய்தி ஊடகம், நூலகம், சந்தை, பொழுதுபோக்கு அரங்கம், நண்பர்கள் சந்திக்கும் இடம், பணியிடம் எனத் திறன்பேசியில் எவ்வளவோ விஷயங்கள் கிடைக்கின்றன. செயற்கை நுண்ணறிவு இந்த மாற்றத்தை இன்னும் வேகப்படுத்துகிறது. எனவே, குழந்தைகளைத் தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் விலக்கிவைப்பது இன்றைய காலத்தில் சாத்தியமற்றது; அது அவர்களை எதிர்காலத்துக்குத் தயார்படுத்தும் வழியும் அல்ல. அதனால், அவர்களைத் தொழில்நுட்பத்திலிருந்து விலக்குவதற்குப் பதிலாக, அதை எப்படி ஆரோக்கியமாகப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொடுப்பதுதான் இங்கு முக்கியத் தேவை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in