அரிய கணிதப் புதிர்: அதிரவைத்த ஏஐ!

மனித அறிவின் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனை
அரிய கணிதப் புதிர்: அதிரவைத்த ஏஐ!
Updated on: 
3 min read

ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உலகின் மிகக் கடினமான கணிதச் சிக்கல்களில் ஒன்றுக்குத் தீர்வு கண்டுவிட்டதாக ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இது வெறும் கணிதச் செய்தி அல்ல, கடந்து செல்வதற்கு. இது ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தொடரும் மனித அறிவின் பயணத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய திருப்புமுனை.

அதிர்ச்சி செய்தி

நீங்கள் கணிதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? பள்ளிக்கூடப் பாடங்களில் ஒன்றாக இருந்து உங்களிடமிருந்து கணிதம் விடைபெற்றுக்கொண்டதா அல்லது கல்லூரியில் இளங்கலைவரை படித்த பிறகு கைவிட்டீர்களா? ஏனெனில், சில இளங்கலைப் பட்டப் பாடங்களில் ஒரு துணைப் பாடமாகக் கணிதம் தொடர்கிறது.

நீங்கள் பொறியியல் படித்திருந்தால் கண்டிப்பாகக் கணிதம் இன்றுவரையில் உங்கள் கூடவே பயணிக்கிறது என்று அர்த்தம். ஒரு பிரபல தகவல் தொடர்பு நிறுவனத்தில் பணிபுரியும் நபரா நீங்கள்? ஓரளவுக்குக் கணிதத்தோடு நீங்கள் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், நான் குறிப்பிடும் கணிதம் வேறு. சீனிவாச ராமானுஜன் முதல் பால் ஆர்டிஷ் வழியே வளர்ந்த உண்மையான கணித மேதைமைப் போக்கு அது. இந்தக் கணிதம் வழக்கமானது அல்ல. கணித மொழியிலேயே உறவாடும் உலகம். இனிமேல் சீனிவாச ராமானுஜனாக செயற்கை நுண்ணறிவே மாறிவிடும் என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி.

உலகக் கணிதச் சிக்கல்கள்

1900ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் சர்வதேசக் கணிதவியலாளர்கள் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு ஜெர்மனியைச் சேர்ந்த உலகறிந்த கணிதவியலாளரான டேவிட் ஹில்பர்ட் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். அவர் ஒரு புதிய கணிதத் தேற்றத்தை மட்டும் முன்வைக்கவில்லை. அதற்கு மாறாக, அவர் எதிர்காலக் கணிதத்தின் 23 மிகப் பெரிய கேள்விகளை முன்வைத்தார்.

அந்தக் கேள்விகளுக்கான விடைகள் அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஹில்பர்ட் என்னும் அந்த மாமேதையின் பார்வை அசாதாரணமானது. ‘இதோ இன்றைய கணிதத்தின் எல்லை!’ என்று அவர் முழங்கினார். அவரது காலத்துக்குப் பின்பும் கடினமான கணிதப் புதிர்களும் தோன்றத் தொடங்கின.

நூற்றாண்டுக்கான கணிதப் பரிசு

இந்த நிலையில்தான், 2000ஆம் ஆண்டில் கிளே மாதமாடிக்கல் இன்ஸ்டிடியூட் உள்ளே நுழைகிறது. இந்தக் கல்வியகம் அமெரிக்காவில் உள்ளது. மனித குலத்தின் முன் ஏழு மிகப் பெரிய கணிதப் பிரச்சினைகளை அது முன்வைத்தது. நூற்றாண்டுக்கான பரிசுச் சிக்கல்கள் (Millennium Prize Problems) என்கிற அவற்றை மனிதர்கள் ஏற வேண்டிய ஏழு மிகப் பெரிய கணித மலைகள் என்றும் அது அறிவித்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in