Published : 14 Apr 2023 06:15 AM
Last Updated : 14 Apr 2023 06:15 AM
தலைநகர் சென்னையில் பூர்வகுடிகள்மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களைப் பற்றிய விவாதங்கள் அவ்வப்போது எழுகின்றன. அந்த வகையில், திடீர் நகரில் வசிக்கும் பட்டியல் சாதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பெரிய அளவிலான கவனம் கோருகின்றன. கூடவே, பட்டியல் சாதியினருக்கான நிதி ஒதுக்கீட்டின் போதாமையும் கவனத்துக்குரியது. அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி இவற்றைப் பேச வேண்டியது அவசியமாகிறது.
தீராத் துயரம்: சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது எழும்பூர் சட்டமன்றத் தொகுதி; இதற்கு உள்பட்ட ஓட்டேரி சுடுகாட்டை ஒட்டி அமைந்துள்ள பகுதிதான் திடீர் நகர். கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் - கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் இங்கு வசித்துவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT