எல்லைகளற்ற எழுத்து

2026 சர்வதேச புக்கர் பரிசுப் போட்டியில் உள்ள 6 நாவல்கள்
எல்லைகளற்ற எழுத்து
Updated on
3 min read

சிறந்த இலக்​கியப் படைப்​பு​களுக்​காக ஆண்​டு​தோறும் வழங்​கப்​படும் புக்​கர் பரிசுகள், உலகளா​விய இலக்​கிய வாசகர்​களால் மிகுந்த ஆவலுடன் எதிர்​பார்க்​கப்​படு​கின்​றன. நேரடி​யாக ஆங்​கிலத்​தில் எழுதப்​படும் நாவல்​களுக்கு ‘புக்​கர் பரிசு’ வழங்​கப்​படு​கிறது.

அதேவேளை​யில், உலகின் எந்த மொழி​யில் எழுதப்​பட்ட நாவலும் சிறுகதைத் தொகுப்பும் ஆங்​கிலத்​தில் மொழிபெயர்க்​கப்​பட்டு பிரிட்​டன் அல்​லது அயர்​லாந்​தில் வெளி​யிடப்​பட்​டிருந்​தால், அது ‘சர்​வ​தேச புக்​கர் பரிசுக்​கான’ போட்​டி​யில் தகுதி பெறுகிறது.

நூலாசிரியரோடு மொழிபெயர்ப்​பாளரின் பங்​களிப்​பை​யும் அங்​கீகரிக்​கும் வகை​யில், 50,000 பவுண்​டு​கள் கொண்ட பரிசுத் தொகை இரு​வருக்​கும் சமமாகப் பகிர்ந்து அளிக்​கப்​படு​கிறது.

தேச எல்​லைகளைக் கடந்து சிந்​திக்​கும் ஓர் இலக்​கியச் சமூகத்தை உரு​வாக்​கு​வதே இந்​தப் பரிசின் முதன்மை நோக்​கம். 2026ஆம் ஆண்​டுக்​கான சர்​வ​தேச புக்​கர் பரிசுப் போட்​டி​யில் 128 புத்​தகங்​கள் சமர்ப்​பிக்​கப்​பட்​டன. பிப்​ர​வரி 24 அன்று வெளி​யான 13 நூல்​கள் கொண்ட முதல் பட்​டியலிலிருந்​து, இறு​திப் போட்​டிக்​கான 6 நூல்​கள் கடந்த மார்ச் 31 அன்று அறிவிக்​கப்​பட்​டன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in