

தமிழின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர் யுகபாரதி. சமீபத்திய ‘கயல்’ திரைப்படம் வரை 2,000-க்கும் மேற் பட்ட பாடல்களை எழுதியிருப்பவர். திரைத் துறை, இலக்கிய நண்பர்கள் சூழ, புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கிக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.
“நான் சினிமா உலகத்துல இயங் கினாலும் அதுக்கும் அடிப்படை இலக்கியம்தான். இலக்கியம் மட்டுமில்லாம வரலாற்றைத் தெரிஞ்சிக்கணும்ங்கிற ஆர்வமும் எனக்கு உண்டு. அந்த வகையில, ராமச்சந்திர குஹா எழுதிய ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ வாங்கி னேன். கவிஞர் ஞானக்கூத்தன் ரொம்ப நாட்களுக்குப் பிறகு எழுதியிருக்கும் ‘என் உளம் நிற்றி நீ’, விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘மாவோவின் தேர்ந் தெடுத்த படைப்புகள்’, நம்மாழ்வார் எழுதிய ‘பூமித்தாயே’, பழ. கருப்பையா எழுதிய ‘மகாபாரதம் மாபெரும் விவாதம்’னு தவறவே விடக் கூடாத புத்தகங்களை வாங்கிட்டேன். திருப்தியா இருக்கு” என்று விடைபெற்றார் யுகபாரதி!