நவநீதம் பிள்ளை: நீதியின் வழி நம்பிக்கை ஒளி | நோபல் பரிசுகள் 2026

பன்னாட்டு நீதி விசாரணை, சட்ட முன்னெடுப்புகள் சார்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் நவநீதம்
நவநீதம் பிள்ளை: நீதியின் வழி நம்பிக்கை ஒளி | நோபல் பரிசுகள் 2026
Updated on: 
3 min read

நீதிமன்ற அறை எண் 600. ஜெர்மனியின் நுரெம்பெர்க் நகரில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்ற வளாகத்தில் அது அமைந்திருக்கிறது. அங்கு பன்னாட்டுச் சட்ட நிபுணர்கள் பங்கேற்கும் நுரெம்பெர்க் கொள்கையியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அதில் ஒரு பங்கேற்பாளராக அமர்ந்திருந்த போதுதான், நீதியரசி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் விருதாளராக அந்த அறையிலேயே நவநீதம் ஒரு சிற்றுரை ஆற்றினார்.

அதே அறையில்தான், கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரில் நாஸி அதிகாரிகளின் அத்துமீறல்கள் மீதான கூட்டு ராணுவ நடுவர் மன்றத்தின் விசாரணை நடைபெற்றது. அதுவே அடுத்தடுத்த காலங்களில், இனப்படுகொலைகள், போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிரான பன்னாட்டு நீதி விசாரணைக் கட்டமைப்பை உருவாக்க அடிகோலிற்று.

அறை எண் 600 – வரலாற்றின் இரண்டு முக்கியத் தடங்களின் வழியாக, உலக நாடுகளின் நீண்ட, நெடிய நீதிப் பயணத்தைக் கோடிட்டு உணர்த்துகிறது. ‘நவி’ பிள்ளை என்று சுருக்கமாக அறியப்படும் நவநீதம் பிள்ளை தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டுச் சட்ட நிபுணர். ‘இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்...’ என்று நோபல் குழுத் தலைவர் ஜோர்ஜென் வாட்னே ஃபிரைட்னெஸ் அறிவித்தது, உலகத் தமிழர்கள் கூடுதல் மகிழ்ச்சியடைந்த தருணம்.

பன்னாட்டு நீதி விசாரணை

நவநீதத்தின் பாட்டனார், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டிலிருந்து தென்னாப்ரிக்கக் கரும்புத் தோட்டத்தில் வேலை தேடிச் சென்றவர். தந்தை நாராயணசாமி பேருந்து ஓட்டுநராக மட்டுமன்றிப் பல வேலைகளைப் பார்த்திருக்கிறார். எட்டுக் குழந்தைகளில் ஐந்தாவது நவநீதம்.

வாழ்வதற்கே போராடிய குடும்பம். மூத்த குழந்தைகள் படித்த நோட்டுப் புத்தகத்தில், எழுதாமல் விட்ட காலியான பக்கங்களைச் சேர்த்து நோட்டுத் தைத்து, அவற்றை இளைய குழந்தைகளுக்குக் கொடுத்துப் படிக்கவைத்தவர் தாய் சாந்தம்மா.

பிறகு சட்டப் படிப்பு, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் என இத்துறையில் நவநீதத்தின் ஆர்வமும் ஆழமும் இன்றுவரை ஓயாத தேடலாகத் தொடர்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in