

ஏனென்றால், பேட்மின்டன் உலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.
ஏனென்றால், பேட்மின்டனில் பிரகாஷ் படுகோனேவுக்குப் பிறகு (1983) உலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.
ஏனென்றால், உலக பேட்மின்டன் சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இவர் இருக்கிறார். பி.டபிள்.யூ. ஜூனியர் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.
ஏனென்றால், இந்த ஆண்டில் முக்கியமான போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார்.
ஏனென்றால், விளையாட்டுத் துறையில் அர்ஜுனா விருது இவருக்கு இந்த இளம் வயதில் (18) வழங்கப்பட்டிருக்கிறது.
ஏனென்றால், ஆண்களும் கிரிக்கெட்டும் ஆதிக்கம் செலுத்திவந்த இந்திய விளையாட்டுத் துறையில், பெண்களின் வரவால் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சியின் இந்த ஆண்டுக்கான அடையாளம் இவர்.
"நான்தான் அடுத்த சாய்னா என்று நிறைய பேர் சொல்கிறார்கள்.இதைப் பற்றி எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யக் கடுமையாக உழைக்க வேண்டும். முக்கியமாக, சிந்துவாகவே நான் சாதிக்க விரும்புகிறேன், சாய்னாவாக அல்ல" - சிந்து