

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 13ஆவது தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் மும்பை, குவாஹாட்டி, இந்தூர், விசாகப்பட்டினம் ஆகிய நான்கு நகரங்களிலும் இலங்கையில் கொழும்பிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் போட்டியிடுகின்றன. பிசிசிஐயின் கட்டுப்பாட்டுக்குள் மகளிர் கிரிக்கெட் அணி இல்லாத காலத்தில், இந்திய அணிக்காக விளையாடியவர் ஆல்-ரவுண்டர் அஞ்சும் சோப்ரா. அர்ஜுனா, பத்ம விருதுகளைப் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும் வர்ணனையாளருமான அஞ்சும் சோப்ராவின் நேர்காணல்: