

நாய்கள் குறித்த எச்சரிக்கை உணர்வு வழக்கத்தைக் காட்டிலும் அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. வெறிநாய்க் கடியினால் மனிதர்களுக்குப் பரவக்கூடிய ரேபிஸ் வைரஸ் தொற்று, உலக அளவிலான பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளுள் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. ‘ரேபிஸின் தலைநகரம்’ என்றே முத்திரை குத்தப்படும் அளவுக்கு இந்தியாவில் நிலைமை மோசம்.
இந்திய மாநிலங்களில் வெறிநாய்க் கடியால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், உலக ரேபிஸ் நாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் தொற்றுநோய்ப் பிரிவு ஆலோசகரும், கேப்ஸ்டோன் கிளினிக்கின் மருத்துவ இயக்குநருமான மருத்துவர் ராமசுப்ரமணியனிடம் பேசியதிலிருந்து: