

இந்தியாவின் முதல் முழுமையான மேற்கத்தியச் செவ்வியல் இசை அடிப்படையிலான சிம்பொனியைப் படைத்த இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுக் கால இசைப் பயணத்தைப் போற்றும் விதமாகத் தமிழ்நாடு அரசு சென்னையில் பாராட்டு விழா நடத்தியது. இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல் எனக் கருதப்படும் இந்நிகழ்வின் அரிய தருணங்கள்:
இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரிகள் ‘ஜனனி ஜனனி’ பாடலுடன் தொடங்கப்படுவது வழக்கம். இம்முறை ‘கோவில் புறா’ படத்தின் ‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ பாடலைச் சிறப்பு விருந்தினர்களுக்கான இருக்கையில் அமர்ந்தபடியே ராஜா பாட, விழா களைகட்டியது.