

இந்தியாவின் முதல் முழுமையான மேற்கத்தியச் செவ்வியல் இசை சிம்பொனியை இயற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் இளையராஜா. ‘வேலியன்ட்’ என்னும் இந்த சிம்பொனியை ‘ராயல் ஸ்காட்டிஷ் நேஷனல் ஆர்கெஸ்ட்ரா’ ஒலிப்பதிவு செய்ய, லண்டனில் உள்ள ‘ஈவென்டிம் அப்போலோ’ அரங்கில் ‘ராயல் பில்ஹார்மனிக் ஆர்கெஸ்ட்ரா’ இசைக் குழு மூலம் அரங்கேற்றியிருந்தார் இளையராஜா.
‘வேலியன்ட்’ சிம்பொனியை உலகப் புகழ்பெற்ற லண்டனைச் சேர்ந்த ‘அபீ ரோடு ஸ்டுடியோஸ்’ என்னும் இடத்தில் ‘மாஸ்டர்’ செய்து வைனல் ரெக்கார்டாக (Vinyl record) மெர்க்குரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுழல் தட்டில் (Turn Table) வைனல் ரெக்கார்டை வைத்து இசையைக் கேட்கும் பழைய முறையில் இந்த ‘வேலியன்ட்’ சிம்பொனியைக் கேட்டு ரசிக்கலாம்.