

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா 2025 ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல்செய்திருந்த தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்ட மசோதா, தேசிய ஊக்க மருந்து தடுப்புச் சட்டத் திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களுக்கும் இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு மசோதாக்களும் சட்டமாகியுள்ளன. இதன் மூலம் விளையாட்டுத் துறைக்கு எனத் தனிச் சட்டங்கள் கொண்ட அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.