சிறப்புக் கட்டுரைகள்
நாய் தெருவுக்கு வந்த கதை | எதிர்வினை
நாடு முழுவதும் இன்றைக்குத் தெரு நாய்க்கடிப் பிரச்சினை பேசப்படுகிறது. தெரு நாய்களுக்கு எதிர்ப்பு ஒரு புறம், ஆதரவு ஒருபுறம். வழக்கு உச்ச நீதிமன்றம்வரை போய்விட்டது. இந்தச் சூழலில், நாய்களின் வளர்ப்பு முறை தவறா, நாம் வாழும் முறை தவறா என்கிற கேள்வி எழுகிறது.
நாய்களுக்கும் எல்லைகள் உண்டு: ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன், கிராமப்புறங்களில் இரவில் வீட்டுக் காவலுக்கும் தோட்டம், வயல்வெளிகளில் பயிர்களை மற்ற விலங்குகளிடமிருந்து காப்பாற்றவும், காடுகளில் வேட்டைக்குப் பயன்படுத்தவும் அதிக எண்ணிக்கையில் நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை அனைத்தும் நாட்டு நாய்கள். ஒவ்வொரு வீட்டிலும் நாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டன. ஆனால், எந்தக் காரணம் கொண்டும் வீட்டுக்குள் நாய்களை வர விடமாட்டார்கள்.
