

சென்னையில் மரபு நடைகளைப் பிரபலப்படுத்தியவர்களில் ஒருவர் திருபுரசுந்தரி செவ்வேள். கட்டிடக் கலைஞர், வரலாற்றுக் காப்பாளரான (Historian Curator) இவர் ‘நம் வீடு, நம் ஊர், நம் கதை’ மரபுக் குழுவின் நிறுவனரும்கூட. சென்னையைப் பற்றியும், நகரை ஆவணப்படுத்துதல், மரபு நடைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியுமான அவரது நேர்காணல்:
‘வந்தாரை வாழவைக்கும் நகரம்’ என்பது சென்னைக்கே உரிய தனித்தன்மையா அல்லது எல்லா நகரங்களுக்கும் உரிய தன்மைதானா? - கல்வி அல்லது வேலை தொடர்பாக சென்னைக்கு வருபவரை இந்த நகரம் நிறைய வாய்ப்புகளோடு வரவேற்கிறது. புதிதாக வருபவர் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில், அவரவர் வழியில் இந்நகரத்தைப் புரிந்துகொள்வார்கள்.