

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் பாதுகாப்பு ஊழியராகப் பணியாற்றிய அஜித் குமார், காவல் சித்ரவதையால் கொல்லப்பட்ட சம்பவம், காவல் சித்ரவதையைத் தடுக்கும் வகையில் விரிவான சட்டம் உடனடியாகத் தேவை என்பதை மீண்டும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
காவல் நிலையங்களிலும், நீதிமன்றக் காவலிலும் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (National Human Rights Commission) ஆண்டு அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தகவல்கள், இப்படி ஒரு சட்டம் அவசியம் என்பதை அழுத்தமாக உணர்த்துகின்றன.