

பெரு வளர்ச்சிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் நாடாக இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது; அதனுள் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது. உலகின் பொருளாதார வலிமைமிக்க நான்காவது நாடாகிறது இந்தியா.
சென்னை, கிண்டி கத்திப்பாரா பாலத்தைத் தாண்டுகையில், வானத்தைப் பார்த்தால் மேலே குறுக்கும் நெடுக்குமாகக் கட்டப்பட்டுவரும் பாலம், சீன நாட்டின் ஷாங்காய் நகரை நினைவூட்டுகிறது. அதி விரைவுச் சாலை, எக்ஸ்பிரஸ் பாதைகள், நொடிப்பொழுதில் பணப் பரிமாற்றங்கள், நம் உள்ளூர்ச் சந்தையிலும் உலகின் உச்ச பிராண்டுகள் என எல்லாம் இப்போது இங்கே வந்துவிட்டன.