

2025ஆம் ஆண்டுக்கான ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, செஸ் உலகின் புதிய இளவரசி ஆகியுள்ளார், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் (19). இந்திய செஸ் உலகம் ஒரு பொற்காலத்தில் அடியெடுத்து வைத்திருப்பதற்கான பல அறிகுறிகளில் இதுவும் ஒன்று.
இந்திய செஸ் சாதனையாளர் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, 2024இல் ஃபிடே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் (19), இளம் வயதிலேயே உலகின் செஸ் சாம்பியனாக மகுடம் சூடியதால் உலக செஸ் அரங்கில் இந்தியாவின் மீது கவனம் திரும்பியது. தற்போது திவ்யா தேஷ்முக்கின் வெற்றியால் செஸ் அரங்கில் இந்திய மகளிரின் ஆதிக்கம் தொடங்கியுள்ளது.