

திருப்புவனத்தில் அரங்கேறிய காவல் மரணம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. வழக்கம் போல் இது அரசியல் விவகாரமாகவும் உருவெடுத்துவிட்டது. மாநிலக் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) உடனடி நடவடிக்கைகளை எடுத்து வழக்கைச் சரியான திசையில் நகரும்படி செய்துவிட்டார்.
முதலமைச்சர் வழக்கை சிபிஐக்கு மாற்றிவிட்டார். மன்னிப்பும் கேட்டுள்ளார். தன் பொறுப்பில் செயல்படும் காவல் துறையைச் சேர்ந்த சிலர் செய்த குற்றத்துக்காக முதல்வர் மன்னிப்புக் கேட்பது வரவேற்கத்தக்கதுதான். இதுவரை எந்த முதல்வரும் இப்படிச் செய்ததில்லை. உண்மையில், ஆளுநர்தான் காவல் துறைக்கும் செயல் தலைவர் (Executive Head).