

மத்திய அரசு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளப்போகிறது. அது மார்ச் 2027இல் முடிவடையும். அனைத்துத் திட்டங்களுக்கும் தரவுகள் அவசியமானவை. குறிப்பாக, மக்கள் நலப்பணிகளைத் திட்டமிடவும் அமல்படுத்தவும், அவற்றைத் துய்ப்பதற்குத் தகுதியான பயனர்களைக் குறித்த துல்லியமான விவரங்கள் அடிப்படையானவை.
தற்போது, 2011இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது குறைபட்டது. புதிய கணக்கெடுப்பு இந்தக் குறைகளை நேர்செய்யும். ஆகவே, இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேவேளையில், இந்தத் தாமதம் பல ஐயங்களையும் அச்சங்களையும் எழுப்புகிறது. அவை குறித்தும் பேசியாக வேண்டும்.