

இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான புதிய நெறிமுறைகளை (Minimum Standards of Instruction for the Grant of Undergraduate Degree and Postgraduate Degree Regulation – 2025) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), இந்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் முந்தைய நெறிமுறைகளில் இருந்தும் 2003, 2008, 2014 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டவை.
மாணவர் சேர்க்கையில் நுழைவுக்குப் பல வாய்ப்புகள் - வெளியேறும் வாய்ப்புகள் (Multiple Entry and Exit option), கற்றல் அளவெண் வங்கி (Academic Bank of credits (ABC), நெகிழ்வான பாடத்திட்ட வடிவம் (Flexible curriculum Structure), ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை (Biannual Admission), நெகிழ்வான கற்றல் முறை (Flexible Learning Mode), முந்தைய கல்வி அனுபவத்தினை அங்கீகரித்தல் (Recognition of prior Learning – RPL) என்பன உள்ளிட்ட கருத்தாக்கங்களைக் கொண்டு இந்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.