

தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் அடுத்த கட்டமான உயர் கல்வியை நோக்கி நகர்கின்றனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.
குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும், தங்கள் குடும்பத்தில் முதன்முறையாகக் கல்வி பயிலும் மாணவர்களும் உயர் கல்வியில் அதிக அளவில் சேர்கின்றனர். இந்தச் சூழலில், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் வாய்ப்புகள், சவால்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.