

கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த நாடு இந்தியா. கல்வி இல்லாமல் நமது நாடு ஒருபோதும் வளர்ந்த நாடாக மாற முடியாது. வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் கல்வியால் மட்டுமே சாத்தியமானது. வளர்ந்த நாடுகளில் உயர் கல்விச் சேர்க்கை சதவீதம் உலக சராசரியில் கணக்கிடும்போது 40%ஆக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 28% என்று நாம் பின்தங்கியிருக்கிறோம். உயர் கல்வியில் நாம் 28% என்றாலும், இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
குறிப்பாக, உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. கேரளம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிஹார் கடைசி இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் உயர் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்குள்ள தனியார் பல்கலைக்கழகம்கூட உலகப் பல்கலைக்கழகங்களுடன் போட்டி போடும் அளவுக்குக் கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறது.