

பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், புதைபடிவ எரிபொருள் தொகுதிகளின் திறந்தநிலை உரிமம் வழங்குவதற்கான பத்தாவது சுற்று ஏலத்தை (OALP-BID) பிப்ரவரி 2025இல் அறிவித்துள்ளது. இந்தச் சுற்றில், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் 9,990.96 சதுர கி.மீ. பரப்பு உள்ளிட்ட 25 ஆழ்கடல் தொகுதிகளின் (1,91,986 ச.கி.மீ. கடற்பரப்பு) ஆய்வு உரிமத்துக்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் காவிரிப் படுகையை ஒட்டிய 8,108 ச.கி.மீ. பரப்பிலும், இந்தியப் பெருங்கடலில் குமரிமுனையைச் சூழ்ந்து மூன்று பகுதிகளில் 27,154 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோகார்பன் வளங்களை ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஏலம் அறிவிக்கப்பட்டது.