சிறப்புக் கட்டுரைகள்
செஸ் அதிகாரம்: காய் நகர்த்தும் கார்ல்ஸன்!
புகழ்பெற்ற செஸ் வீரரான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்ஸன், இன்றைக்கு உலக சாம்பியன் இல்லை. 2013ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை (2013, 2014, 2016, 2018, 2021) கிளாசிக்கல் செஸ்ஸில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற கார்ல்ஸன், நவீன செஸ் உலகின் ஜாம்பவானாக உருவெடுத்தவர்.
2023ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். என்றபோதும், முன்பு இருந்ததைவிட செஸ் விளையாட்டு தொடர்பான தலைப்புச் செய்திகளில் கார்ல்ஸனின் பெயரே அதிகம் இடம்பெறுகிறது; செஸ் வெற்றியைவிடவும், அதிகாரத்தை நோக்கிய அவரது காய் நகர்த்தல்தான் இன்றைக்குப் பேசுபொருளாகியிருக்கிறது.
