

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
அன்றாட வாழ்வை இயற்கையுடன் இணைந்ததாகப் பார்க்கும்போது, பெரும்பாலும் மனிதர்களின் இயக்கம் தங்களைச் சுற்றியுள்ள குழுவினரின் எல்லைக்குள்தான் அமைகிறது. ஒரு கிராமத்தில் பிறந்த மனிதர் பெரும்பாலும் அந்தக் கிராமத்தவர்கள், சுற்றியுள்ள சில கிராமத்தவர்களுடன் கொள்ளும் உறவிலேயே மொத்த வாழ்க்கையும் அமைந்துவிடலாம்.