

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள கிராம மக்களின் பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடிவருபவர் மருத்துவர் வீ.புகழேந்தி. மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவை அளிக்கும் மருத்துவர் என்றும் இவர் போற்றப்படுகிறார். தடுப்பூசிகளின் போதாமையில் தொடங்கி, மருத்துவ உலகம் கார்ப்பரேட்மயமாகி வருவதற்கு எதிராகத் தொடர் செயலாற்றி வருகிறார். சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழுவில் உறுப்பினராக, ஒரு மருத்துவப் போராளியாக விளங்கும் புகழேந்தியுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...
பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்ய உங்களைத் தொடர்ந்து இயக்குவது எது?