மாறுபட்ட கவிதைகளின் உருவங்கள் | நூல் வெளி

மாறுபட்ட கவிதைகளின் உருவங்கள் | நூல் வெளி
Updated on
1 min read

மாறிவரும் தமிழ்க்​ க​விதை தனக்​கென்று புதிய உரு​வங்​களை தேர்ந்​து​கொண்​டுள்​ளது. அன்​றாடத்​திலிருந்து தப்​பிப்​பது, சமகால அரசி​யலின் பாரதூரத்தை அளந்​து​காட்​டு​வது, வாழ்​வின் எல்​லைக்கு அழைத்​துச்​சென்று உண்​மையை தெளிய​வைப்​பது போன்ற புதிய திசைகளில் வேல்​கண்​ணன் கவிதைகள் வெகு அழகாகப் பயணிக்கின்​றன.

தொடக்​க​கால கவிதைகளின் உள்​ளடக்​கங்​கள், சுயம்​சார்ந்த பிரகடன​மாக அமைந்​தன. மின்​கம்​பி​யில் அமர்ந்​துள்ள குரு​வி​யின் இருத்​தலைப் போல அவரது தன்​னிலை புலப்​படத் தொடங்​கு​கிறது.

‘நேற்​று​ வரை நிதர்​சன​மானவை/ பொய்த்​துப் போகின்​றன/ திசைகள் அற்ற நட்​டநடுப் பாலை​வனத்​தில்/ கம்​பளிப் போர்​வை​யில் கிடக்​கிறேன்/ உள்​நாக்​கின் அமில ரசம்/ அழுகிய வீச்​சமடிக்​கிறது’ என சுய பகடி​யாகவே வாழ்வை அணுகு​கின்​றன.

‘சுய தேடல்’ என்​றொரு தலைப்​பில் ஒரு கவிதை. அதில், ‘தொலைத்​ததும் நானே/ தொலைந்​ததும் நானே/ தொடர்ந்​தும் தேடு​கிறேன்/ தொடர்ந்​தும் தொலைகிறேன்’ என சுயத்​தின் நிறைவுறாத் தன்​மையை பேசுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in