

ஆறாவது அறிவு - மனிதருக்கு வரமாக மட்டுமே அமைந்திருக்க வேண்டியது. அது சாபம் ஆகிவிட்ட நிலையையும் உலகம் காண்கிறது. எறும்பு முதல் திமிங்கிலம் வரைக்கும் பிற உயிரினங்கள் அனைத்தையும் மேலாண்மை செய்யக்கூடியவனாக மனிதரை உயர்த்தியுள்ளது, மனம் என்கிற ஆறாவது அறிவு.
அதே அறிவு மனிதர்களைத் தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்லும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே நிகழ்கின்றன. உதாரணமாக, அணுகுண்டிலிருந்து சாதி வேறுபாடு வரைக்குமான மனிதரின் ‘கண்டுபிடிப்பு’கள். இயற்கையோடு ஒத்திசைவாக வாழ வேண்டிய மனிதகுலம், அதைத் தோற்கடிக்கும் அகந்தையில் செயல்படுவதன் இறுதி விளைவு என்னவாக இருக்கும்? இதுகுறித்துச் சிந்திக்க மனிதரில் பலருக்கு நேரம் இல்லை.