எஸ்​.ஆர்​.​வி. தமிழ் விருதுகள் | திண்ணை

எஸ்​.ஆர்​.​வி. தமிழ் விருதுகள் | திண்ணை
Updated on
1 min read

திருச்சி எஸ்​.ஆர்​.​வி. பள்​ளி​கள் சார்​பில் ‘அறிஞர் போற்​று​தும்’ என்ற பெயரில் ஆண்​டு​தோறும் சிறந்த தமிழ் அறிஞர்​களுக்கு விருதுகள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. அந்த வகை​யில் 2026ஆம் ஆண்​டுக்​கான ‘எஸ்​.ஆர்​.​வி. தமிழ் விருதுகள்’ அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. வாழ்​நாள் சாதனை​யாளர்​கள் விருதுக்கு எழுத்​தாளர்​கள் கி.​விட்​டல்​ராவ், பாவண்​ணன் ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தமிழ் இலக்​கிய விருதுக்கு கவிஞர்​கள் க.மோக​னரங்​கன், இளம்​பிறை, மொழிபெயர்ப்​பாளர் ஆர்​.சிவகு​மார், சமூகநோக்கு விருதுக்கு மருத்​து​வர் சு.அனுரத்​னா, படைப்​பூக்​கத் தமிழ் விருதுக்கு கவிஞர்​கள் இசை, பொன்​முகலி, எழுத்​தாளர் அசதா மற்​றும் சிறார் தமிழ் விருதுக்கு எழுத்​தாளர் சாலை செல்​வம் ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். விருதுகள் வழங்​கும் விழா செப்​டம்​பர் 5ஆம் தேதி (சனிக்​கிழமை) நடை​பெற உள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in