

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் கா.உதயசங்கருக்குப் பாராட்டுக் கூட்டம் மற்றும் படைப்புகள் ஆய்வரங்கம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.30 மணி முதல் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் உதயசங்கரின் படைப்புகள் குறித்து ஜா.மாதவராஜ், அ.இலட்சுமிகாந்தன், விஷ்ணுபுரம் சரவணன், ஆதி வள்ளியப்பன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். மேலும், மதுக்கூர் ராமலிங்கம், ஆதவன் தீட்சண்யா, களப்பிரன் உள்ளிட்ட தமுஎகச நிர்வாகிகள் பேசுகின்றனர். நிறைவாக உதயசங்கர் ஏற்புரை நிகழ்த்துகிறார்.