சாகித்ய அகாதமி மற்றும் சென்னை தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் ‘மொழிபெயர்ப்பு நாவல்கள்: சாகித்ய அகாதமியின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலான இலக்கிய அரங்கு செப்டம்பர் 30 (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
கல்லூரி முதல்வர் க.கல்விக்கரசி தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், கல்லூரியின் இயக்குநர் நா.இராசேந்திர நாயுடு, ஆய்வாளர்கள் பா.இரவிக்குமார், விக்னேஷ் ஹரிஹரன், வேல் கண்ணன், சீனிவாச ராமாநுஜம், சுப்பிரமணி இரமேஷ் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.