தெற்கெல்லைப் போர் முழக்கங்கள்

தெற்கெல்லைப் போர் முழக்கங்கள்
Updated on
1 min read

மொழி​வழி மாநிலப் பிரி​வினை பற்​றிய பேச்​சு எழுந்​த​போது தமிழகத்​தின் வடக்​கிலும் தெற்​கிலும் எல்​லைப் பிரி​வினை பற்​றிய கிளர்ச்​சிகள் எழுந்​தன. அப்​படித் தெற்​கில் திரு​வி​தாங்​கூரின் தமிழர் பகு​தி​களான தேவாளை, அகஸ்​தீஸ்​வரம், கல்​குளம், விளவங்​கோடு, பீர்​மேடு, தேவி​குளம், குமரிப் பகு​தி​களைத் தமிழ்​நாட்​டோடு இணைக்க நடை​பெற்ற போராட்​டங்​களின் வரலாற்​றுச் சாட்​சி​ய​மாக விளங்​கு​கிறது ‘தெற்​கெல்​லைப் போராட்​டப் பதிவு​கள்’ என்​னும் இந்​நூல். தொகுப்​பாளர் ரா.சீனு​வின் முன்​னுரை ‘நுதலிப் புகுதல்’ என்​றபடி போராட்ட வரலாற்​றைச் சுருக்​க​மாய்த் தெரி​வித்து நிற்​கிறது.

‘குமரி எல்​லை’ என்ற பெயரில் 1947இல் வெளி​யான சி.குழந்​தை​சாமி​யின் சிறு​ பிரசுரம், ம.பொ.சி-​யின் கட்​டுரை, அவரின் தென்​திரு​வி​தாங்​கூர் பயணத்​தைப் பற்​றிய சி.வேங்​கட​சாமி​யின் கட்​டுரை, மார்​ஷல் நேசமணி​யின் வரவேற்​புரை, 1954இல் வெளிவந்த ஜீ​வா​வின் பிரசுரம், சில தலை​யங்​கங்​கள், புதுக்​கடைத் துப்​பாக்​கிச் சூட்​டுக்கு எதி​ரான தமிழர் பேரவை அறிக்​கை, குஞ்​சன் நாடார் ஆற்​றிய மலை​யாள உரை​யின் தமிழாக்​கம், செங்​கோட்டை தமிழ்​நாட்​டோடு இணைக்​கப்​பட்​ட​போது சுப்​பிரமணி​யக் கரை​யாளர் ஆற்​றிய உரை என இத்​தொகுப்பு பன்​முகப்​பட்டு விரி​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in