பகுத்தறிவுப் பயணத்துக்கு ஒரு வழிகாட்டி | நம் வெளியீடு

பகுத்தறிவுப் பயணத்துக்கு ஒரு வழிகாட்டி | நம் வெளியீடு
Updated on
2 min read

மானிட வரலாற்​றின் மிகச் சிறந்த இயங்​குசக்தி எது என்று கேட்​டால், யோசனை​யின்றி ‘அறி​வியல்’ என்று சொல்​லி​விடலாம். இன்று நாம் அனுபவிக்​கும் அத்​தனை வசதி​களும், நோய்​களி​லிருந்து விடு​பட்டு வாழும் பாது​காப்​பான வாழ்க்​கை​யும், பிரபஞ்​சத்தை அளக்க முனை​யும் நமது பரந்த அறி​வும் ஒரே இரவில் சாத்​தி​ய​மானவை அல்ல.

அவை ஒவ்​வொன்​றுக்​குப் பின்​னாலும் ஆயிரக்​கணக்​கான மனிதர்​களின் அர்ப்​பணிப்​பும், வாழ்​நாள் உழைப்​பும் மறைந்​துள்​ளன.

இன்று நாம் இயல்​பாக ஏற்​றுக்​கொள்​ளும் ஒவ்​வொரு அறி​வியல் உண்​மை​யும், ஏதோ ஒரு காலத்​தில் பழமை​வாதம், மதக் கோட்​பாடு​கள், அதி​கார மமதை மற்​றும் சக விஞ்​ஞானிகளின் அறி​யாமை ஆகிய​வற்றை எதிர்த்து நின்று பெற்ற வெற்​றி​யாகும்.

பூமி சூரியனைச் சுற்​றுகிறது என்று சொன்​னதற்​காக ஆயுள் முழு​வதும் வீட்​டுக்​காவலில் அடைக்​கப்​பட்ட கலிலியோ, பிரபஞ்​சம் முடிவற்​றது என்று பிரகடனப்​படுத்​தி​யதற்​காக நாவறுக்​கப்​பட்டு உயிருடன் கொளுத்​தப்​பட்ட ஜியோர்​டானோ புருனோ, பிரசவத்​தின்​போது மருத்​து​வர்​கள் கை கழுவ வேண்​டும் என்று கூறி நோய்த்​தொற்​றைத் தடுக்க முயன்​றதற்​காக மனநலக் காப்​பகத்​தில் அடைக்​கப்​பட்டு உயிர் துறந்த இக்​னாஸ் செம்​மல்​வைஸ், மனித குலத்​தின் கணினி அறி​வியலுக்கு அடித்​தளமிட்​டும்

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in