

உழைப்பும் தொழில்களுமே கலை, இலக்கியத்தின் மூலாதாரங்கள். அப்படி மக்களின் உழைப்பு மூலம் உருவாகும் கலை, இலக்கியப் படைப்புகள் மக்களுக்காகவே என்பது மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படை.
எழுத்து இலக்கியம், செவ்விலக்கியப் படைப்புகள் மட்டுமல்லாமல் மக்களின் வாய்மொழி இலக்கியம், நாட்டார் கலைகள் எனக் கலை, இலக்கியத்தின் எல்லைகளை விரித்ததில் இந்தக் கோட்பாட்டுக்கும் அதன் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இவை மார்க்சிய அழகியல், மார்க்சிய இலக்கியக் கோட்பாடு போன்றவற்றையும் உருவாக்கின.
யதார்த்தவாத இலக்கியம் தீவிர இலக்கியமே இல்லை என்கிற கருத்து தமிழ் நவீன இலக்கிய உலகில் முன்னிறுத்தப்பட்டு, கலை கலைக்காகவே என்று பல காலம் கூறப்பட்டு வந்திருக்கிறது.