

தி கோல்ட்மன் கேஸ் திரைப்படம் 2023இல் வெளிவந்தபோது, கோல்ட்மன் என்ற பெயர் பல வருடங்களுக்குப் பிறகு உலகரங்கில் மீண்டும் உச்சரிக்கப்பட்டது. 1975இல் கொலை குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் கோல்ட்மன் என்ற பிரெஞ்சு இடதுசாரி கலகக்காரரின் பெயரை அப்பொழுதுதான் முதல்முறையாக கேள்வியுற்றேன்.
“நான் நிரபராதி, ஏனென்றால் நான் நிரபராதியாக இருக்கிறேன்” என்ற கோல்ட்மனின் புகழ்பெற்ற நீதிமன்ற வாதமும் பிரான்ஸின் ஆளும் அமைப்பைக் குறித்த கோல்ட்மனின் விளக்கங்களும் அன்றைய இளையதலைமுறையினர் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.