பென்சிலின் கதை

பென்சிலின் கதை
Updated on
1 min read

‘உன்னை வழிநடத்த பெற்​றோர் போன்ற ஒரு கை தேவை. வாழ்க்​கை​யில் உன்​னைச் செதுக்க வேண்​டி​யிருக்​கும். அது உனக்கு வலி தந்​தா​லும் உன்​னைச் சிறந்​தவ​னாக மாற்​றும். தவறு செய்​தால் அதை அழித்​து, திருத்​திக்​கொள்ள முடி​யும்.

உன்​னுடைய வெளித்​தோற்​றத்​தை​விட உன் குணமே முக்​கி​யம். நீ செல்​லும் இடமெல்​லாம் உன் தாக்​கத்தை விட்​டுச் செல்​வாய்’ என்று பென்​சிலைப் பற்​றிய உலகப் புகழ்​பெற்ற கதை ஒன்று உண்​டு.

இப்​படிப்​பட்ட பென்​சிலைக் கையில் பிடிக்​காதவர்​கள் யாரும் இருக்க மாட்​டார்​கள். ஒரு பென்​சிலால் 36.3 கி.மீ. நீளத்​துக்​குக் கோடு இழுக்க முடி​யும், இந்​தி​யா​வில் தேசிய பென்​சில் நாள் மார்ச் 30 போன்ற சுவாரசி​ய​மான தகவல்​களு​டன் பென்​சிலின் வரலாறு, கிராபைட் என்​பது என்ன, பென்​சில் மரம், ஒரு பென்​சில் எப்​படித் தயா​ராகிறது, எச். பி என்​றால் என்ன, பென்​சில் அருங்​காட்​சி​யகம், மறுசுழற்சி பென்​சில்​கள் போன்ற பல தகவல்​கள் இந்த நூலில் இடம்​பெற்​றுள்​ளன.

பெரிய அளவில், பெரிய எழுத்​துகளில், படங்​களோடு வெளிவந்​திருக்​கும் இந்த நூல், இளம் வாசகர்​களுக்​குச் சுவையூட்​டும்​.

பென்சில்

முத்தையா வெள்ளையன்

கற்றளி பதிப்பகம்

விலை: ரூ.80

தொடர்புக்கு: 73973 34916

பென்சிலின் கதை
‘அறிய வேண்டிய அரிய தகவல்கள்’ முதல் ‘தமிழகத்தில் சமூகநீதிப் போராளிகள்’ வரை | நூல் வரிசை
Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in