

மக்கள் தொண்டே மகேசனுக்கான தொண்டு என்கிற கொள்கையோடு வாழ்ந்தவர் சுவாமி சகஜானந்தர். பட்டியல் சாதியைச் சேர்ந்த அவர் சிதம்பரத்தில் நந்தனார் பெயரில் நடத்திய ஆசிரமம் பல சமூகச் சீர்திருத்தப் பணிகளுக்காக அறியப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியிலும் நாடு விடுதலை அடைந்த பிறகும் சென்னை மாகாணச் சட்டப் பேரவையில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக அவர் உறுப்பினராக இருந்தார். சகஜானந்தர் சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல்.
ம.வெங்கடேசன் இவற்றைத் தொகுத்துள்ளார். சகஜானந்தரின் சிந்தனைகள், சமூகப் பிரச்சினைகளை அவர் அணுகிய விதம், காந்தியடிகள் உள்ளிட்ட சம கால ஆளுமைகள் குறித்த அவரது கருத்துகள் போன்றவற்றை இந்த உரைகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.