

வாழ்வின் ஆன்ம ரகசியத்தை தேடுகிறான். நான் என்பது ஆத்மாவே என்றும் பிரம்மத்தைப்போல அதுவும் அழிவற்றது என நம்புகிறான். தந்தையின் விருப்பத்துக்கு மாறாக சமணத்தை தழுவுகிறான். பின்னர் கவுதம புத்தரோடும் தர்க்கம் செய்கிறான்.
அவனது கோட்பாட்டுப் பயணத்தில் கமலா எனும் தாசியை சந்திக்கிறான். தத்துவார்த்த நெறிகளை மறந்தான். பொன்னும் பொருளையும் சேர்த்தான். ஆனால் அவை நிச்சயமற்றவையாதலால் ஒருநாள் யாவையும் இழக்கிறான்.