சாதியற்ற சமூகத்துக்கான வரைபடம் | நூல் வெளி

சாதியற்ற சமூகத்துக்கான வரைபடம் | நூல் வெளி
Updated on
1 min read

சாதியின் பிடியி​லிருந்து மக்​களை விடுவிக்க காந்​தி, ராஜா​ராம் மோகன் ராய் முதலான சமூகச் சீர்​திருத்​த​வா​தி​கள் சித்​தாந்​தங்​களை முன்​மொழிந்​துள்​ளனர். இருப்​பினும் சாதியத்தின் வேர்​களைப் பிடுங்க அவர்​கள் முற்​பட​வில்​லை. பொது​வுடைமை​வா​தி​களோ வர்க்​கப் போராட்​டத்​தி​னால் மட்​டுமே புரட்சி சாத்​தி​யமென அறை​கூவலிட்​டனர்.

அம்​பேத்​கரும், 1920கள் வரை​யில் சமய சீர்​திருத்​தங்​களின் வழி​யாகப் பட்​டியலின மக்​கள் இழந்த உரிமை​களை மீட்​டெடுக்க முடி​யும் என்றே நம்​பி​னார். ஆனால், 1930களில் இந்​திய அரசி​யல் களம் தலைகீழ் மாற்​றம் கண்​டது. 1931இல் பிரிட்​டிஷாரை இணங்​க​வைத்து பட்​டியல் சாதி​யினர் தனித்​தொகு​தி​யில் போட்​டி​யிடும் உரிமையை அம்​பேத்​கர் வென்​றெடுத்​தார்.

இதனை எதிர்த்து காந்தி சாகும்​வரை உண்​ணா​விரதம் மேற்​கொண்​டார். காந்​தி​யும் பட்​டியல் சாதி​யினரை ஆதரிக்​கவே செய்​தார். தீண்​டாமை பெரும்​பாவம், அதே​நேரம் சாதி சமூக வேறு​பாட்​டினை மட்​டுமே குறிக்​கிறது எனும் பார்​வையை காந்தி கொண்​டிருந்​தார். சாதிய கருத்​தி​யலுக்​கும் தீண்​டா​மைக்​கும் இடை​யில் உள்​ளார்ந்த தொடர்​பிருப்​ப​தாக வாதிட்​டார் அம்​பேத்​கர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in