

மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே சமூகத்துக்கும் அகம், புறம் இரண்டும் உண்டு. அவற்றைத் தீர்மானிப்பது மனிதர்கள்தாம். எனினும், அப்படி ஒற்றைத் தன்மையில் சுருக்கிவிடவும் முடியாது.
காரணம், அதிகாரம், மதம், வர்க்கம், கலாச்சாரம் எனச் சமூகம் பல்வேறு மனித அக, புறங்களைக் கொண்டிருக்கிறது. இதில் எது, எதை ஆள்கிறது என்பது காலத்தின் புதிர்.
இந்தச் சுழலுக்குள் மனித வாழ்வு எதிர்கொள்கிற சிக்கல்கள் ஏராளம். அவற்றை நன்மை, தீமை; கடவுள், சாத்தான் என்ற இருமைக்குள் ஒருபோதும் அடக்க முடியாது.