

பழமையில் காலூன்றி, நவீனத்துவத்தை அரவணைக்கும் கரிகாலன் கவிதைகள், மணிமுத்தாறு கரைகளில் விளையாடி வளர்ந்தவை. அந்த நினைவேக்கம், ‘மனமழிதல்’ கவிதையில் வேறொன்றாக வெளிப்படுகிறது. பால்யத்தில் இளம்பெண்களும் அம்மாவும் அவன் மனதைத் தயாரித்த விதங்களைச் சொல்கிறார் கவிஞர்.
‘பிறகு, ஊரை விட்டுத் தாண்டாத/ ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்/ மாரியாத்தா கோயில் பூசாரி/ சர்ச் ஃபாதர் நபிகள்நாயகம்/ மார்க்ஸ் அம்பேத்கர்/ பெரியார் தேவி/ நயன்தாரா ஓஷோ/ இவர்களெல்லாம் சேர்ந்து/ அவன் மனசைத் தயாரித்தார்கள்’ என்பதை சொல்லிவிடுகிறார்.