

பச்சைப் புத்தகத்தின் முதல் கட்டுரை கறுப்பினத்தவரின் பச்சைப் புத்தகம் பற்றியது. அமெரிக்காவில், நிறவெறி மேலோங்கியிருந்த 1920, 30களில் நெடுஞ்சாலைப் பயணத்தின் வழியே, கறுப்பினத்தவர்களுக்கான பாதுகாப்பான தங்குமிடங்களைப் பற்றிய வழிகாட்டி நூல் அது.
இச்செய்தியை வைத்து, 2018இல் உருவான ‘கிரீன் புக்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கறுப்பின இசைக்கலைஞரான டான் ஷ்ரைலியின் டைரிக்குறிப்புகளைக் கொண்டு தயாரான அத்திரைப்படம் ஆஸ்கர் உள்ளிட்ட உலகளாவிய விருதுகளை வென்றது.
இப்படத்தை ‘சாலைவழிப் படம்’ (Road Movie) என்ற அளவில் ரசித்தவர்களுக்கு, நூலாசிரியர் முன்வைக்கும் தகவல்கள் மிகவும் புதியவை. ‘யாத்திசை’ திரைப்படத்தில், போரில் மாண்ட வீரர்களின் மார்பைக் கீறி புதைக்கும் வழக்கம் காட்டப்படுகிறது.