

நியூசிலாந்து பழங்குடிகளான மாவோரி இனச் சிறார்களின் கல்விக்காக சில்வியா ஆஸ்டன் வார்னர் சுமார் 24 ஆண்டுகள் பணி செய்தார். தன்னுடைய பணிக் கால அனுபவங்களைத் திரட்டி உண்மை தரவுகளின் அடிப்படையில் ‘ஓர் ஆசிரியர்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். கல்வியாளர் ராஜேந்திரன் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
“வாழ்வது எப்படி என கற்றுக் கொள்வதுதான் அறிவு பெறுவதை விட முக்கியமானது” என்கிறார் சில்வியா. அவர் செயல்படுத்திய இயல்பான கற்பித்தல் அணுகுமுறை குழந்தைகளின் மனப்பாங்கினை போரிலிருந்து அமைதிக்கு திருப்புவதற்கான முக்கிய அடிப்படையாக அமைந்தது.
ஆசிரியரின் கடமை என்பது குழந்தைகளின் உள் ஆற்றலை இயல்பாக வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகளை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்துவது ஆகும் என்கிறார் ஆசிரியர்.