

நவீன கவி வடிவமோ, உரைநடைக் கவிதைகளின் வடிவமோ அல்ல; திரைச்சீலை நீண்டு அகன்று தொங்குவது போல, அடிதோறும் ஆறேழு சொற்களுடன் நீள் வரிகளில் எழுதப்பட்டுள்ள 108 கவிதைகளின் தொகுப்பு இது. இது ஒரு புது முயற்சி.
‘நாச்சியார் திருமொழி’யில் சிற்றில் சிதைக்க வேண்டாமென கண்ணனை வேண்டிப் பாடும் ஆண்டாள் பாடல்களின் ஓசைநயம் நீண்ட லயத்தோடு இசைந்து வருவதை நெடுகிலும் கேட்க முடியும்.
அது ஆண்டாள் கவிதைகள் என்றால், இத்தொகுப்பின் கவிதைகள் நவீன ஆண்-கவி மனதின் ஆழ்ந்த பெருமூச்சு. அரற்றிக்கொண்டேயிருக்கும் ஆழ்மனதின் பெருவெள்ளமாக, ஏராளமான சொற்சேர்க்கைகள், சொற்செட்டுகள், படிமங்களின் தூசிப் படலங்களாக பாய்ந்தோடிக் கொண்டேயிருக்கின்றன.