உணவும் மருந்துதான்

உணவும் மருந்துதான்
Updated on
1 min read

நல வாழ்​வுக்​குத் தேவை​யானதைப் பரிந்​துரைக்​கும் ஔவை​யின் ஆத்​திசூடி அறி​வுரைகளில் ஒன்​று, ‘நோய்க்கு இடம் கொடேல்’. உணவையே மருந்​தாகக் கொண்ட பழந்​தமிழரின் வாழ்க்கை முறையைப் பின்​பற்​றி​னால் நோய்க்கு இடம் கொடா​மல் வாழ முடி​யும் என்று நிறு​வு​கிறார் ஊட்​டச்​சத்து நிபுணர் நாகப்​பன் சூரிய​நா​ராயணன்.

நம் உணவுப்​பழக்​க​மும் மாறிவரும் வாழ்க்கை முறை​யுமே பெரும்​பாலான தொற்றா நோய்​களுக்​குக் காரண​மாக இருக்​கின்​றன. எண்​ணெய்​யில் பொறிக்​கப்​பட்ட – வறுக்​கப்​பட்ட இறைச்​சி, சக்கை உணவு, செயற்​கைக் குளிர்​பானங்​கள், உடற்​ப​யிற்​சி​யின்மை போன்​றவை நோய்​களை அழையா விருந்​தாளி​யாக நம் உடலுக்கு அழைத்​து​ வரு​கின்​றன.

இதயநோய், சர்க்​கரை நோய், உயர் ரத்த அழுத்​தம், சிறுநீரக நோய்​கள், உடல்​பரு​மன், மார்​பகப் புற்​று​நோய் உள்​ளிட்ட பல நோய்​களுக்​கும் ‘கொலஸ்ட்​ரால்’ ஒரு காரணி​யாக இருக்​கிறது என்​பதை ஆய்​வுத் தரவு​களோடு முன்​வைக்​கிறார் நாகப்​பன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in