காணாமல் போகும் இளைஞர்கள்

காணாமல் போகும் இளைஞர்கள்
Updated on
1 min read

தமிழில் 90களி​லிருந்​து, லத்​தீன் அமெரிக்க இலக்​கி​யத்​தின் தாக்​கம் யுக​ மாற்​றத்​துக்​கான ஒரு கரு​வி​யாகவே உணரப்​பட்​டது. ‘நிழல்​களின் உரை​யாடல்’ என்​னும் இந்​நாவலை அமரந்தா மொழிபெயர்த்​திருப்​பது தற்​செய​லானதல்ல; அவரது சமூக செயற்​பாட்​டின் இன்​னொரு பகு​தி.

அமரந்​தா​வின் மொழிபெயர்ப்​பு​கள், மூன்​றாம் உலக நாடு​களின் சமூக, பண்​பாடு, அரசி​யல், இலக்​கி​யம் சார்ந்து தீவிர வாசிப்​பு​களை ஏற்​படுத்​தி​யிருக்​கின்​றன.

அவ்​வரிசை​யில், மார்த்தா த்ராபா எழு​திய இந்த லத்​தீன் அமெரிக்க நாவல், அப்​பாவி மக்​கள் அடிக்​கடி காணா​மல் போவது என்​பது, எங்​கெல்​லாம் போராட்​டம் நடக்​கிறதோ... போர் நடக்​கிறதோ அங்​கெல்​லாம் சர்​வ​சா​தா​ரண​மாக நடக்​கிறது... என்​பதை மைய​மாக வைத்​துள்​ளது.

இந்​நாவலின் முதல் வரியே, `அழைப்பு மணி​யோசை அவளைத் தூக்​கி​வாரிப் போட்​டது' என்று தொடங்​கு​கிறது. பியூனஸ் அயர்​ஸில் உள்ள அந்த வீட்​டின் உள்ளே இருக்​கும் மூத்த நாடக நடிகை​யான ஐரீன், அழைப்​பு மணிக்கு உடனே செவி​சாய்க்​காமல் சிறிது நேரம் மவுன​மாகக் கடக்​கிறார். மீண்​டும் அழைப்பு மணி​யோசை மெது​வாக ஒலிக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in