லகுவான சொற்களில் காட்சிகளின் மாய பிம்பங்கள்

லகுவான சொற்களில் காட்சிகளின் மாய பிம்பங்கள்
Updated on
1 min read

உள்​ளடக்​கத்​தில் சமூக சிந்​தனைமிக்க ‘வானம்​பாடி’; உரு​வத்​தில் சோதி​மிக்க ‘நவக​விதை’ என நெருக்​கடிகளுக்​காக உயரும் குரல், நிதர்​சனத்தை பகிரும்​போது மெல்​லிய தொனி​யில் சன்​ன​மாகி​விடு​கின்றன பழநி​பார​தி​யின் கவிதைகள்.

இத்​தொகுப்​பின் கவிதைகள் அதி​கம் சர்​ரியலிசத்தை நோக்கி நகர்​வ​தாகத் தெரி​கிறது. அரு​கில் இல்​லாத தன் இணைக்​குச் சொல்ல நினைக்​கும், அன்பை நினை​வூட்​டும் வாட்​ட​முற்ற பிரி​வின் செய்​தி​களாகத்​தான் அவை வெளிப்​பட்​டுள்​ளன. அன்பை யாசிக்​க​வில்​லை. எதை​யும் நேரடி​யாக சொல்​ல​வுமில்​லை.

நீ அரு​கில் இருந்​தால் நன்​றாக இருக்​கும் என்​றுகூட சொல்​ல​வில்​லை. ஒரு கவிதை இப்​படி ஆரம்​பிக்​கிறது: ‘நீ இருந்​திருந்​தால்/ உன் அரு​கில் /அமைதி ஒரு கொடி போல படர்ந்​திருக்​கும்’ என்று தொடங்​கி, தனிமை வீட்​டின் சாளர கண்​ணாடி​யில் மோதும் மின்​னலும், கதவின் அருகே பெய்​யும் மழை​யுமே துணை​யா​யிருக்​கிறது எனக்கு என்​பதை சொல்​கிறது.

அவள் அரு​கில் இல்​லாத​தால் கவிஞனின் மனதில் ஏற்​படும் தடு​மாற்​றத்தை வேறு பொருட்​களின் மீது ஏற்றி அதைக்​கூட ஒரு தகவலாகத்​தான் நினை​வூட்​டலாகத்​தான் இக்​க​விதை​யில் கடத்​தப்​படு​கிறது. காதல் உணர்​வு​களுக்​கான முக்​கி​யத்​து​வத்​தை​விட, உலக உயிர்​களின் யதார்த்​தங்​களை பரிசீலிக்​கின்றன இவரது பல கவிதைகள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in