

இன்றைய காலகட்டத்தில் Stress, Anxiety, Depression, Stigma, Introvert, Mania போன்ற சொற்கள் மக்களிடையே வெகு இயல்பாகப் புழங்குகின்றன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற திறன்பணிகளில் (Smart Work) இத்தகைய சொற்கள் அதீதமாகச் சொல்லப்படுகின்றன. இதுகுறித்த விவாதங்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
உண்மையில், இச்சொற்களின் பொருள் என்ன, மக்கள் இவற்றை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்கள், உளமருத்துவ ரீதியாக எப்படிக் கையாள வேண்டும் என்பன பற்றி விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.
உலக அளவில் கரோனா தொற்றுக்குப் பிறகான சூழல் இளைஞர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு பற்றிய அச்சம் ஒருபுறம், இருக்கும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ளும் நெருக்கடி மறுபுறம் என அவர்களின் நிலை சிக்கலான வலைக்குள் மாட்டிக்கொண்டது.